நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் : மைத்திரிபால சிறிசேன

April 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விசா முறை

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுக் குற்றச்சாட்டிற்காக ஒரு வருட சிறைத்தண்டனை பெற்று வந்த கைதியும், விளக்கமறியல் கைதி ஒருவருமே நேற்று காலை தப்பியோடினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலாப் பயணிகளுக்கு உணவுகள் அதிக விலைக்கு விற்பனை மேலும் ஒருவர் சிக்கினார்

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு – புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலித்த தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம்

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலித்த தெவரப்பெரும காலமானார்

April 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார். 63 வயதுடைய பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: மதகுரு உட்பட நால்வர் காயம்

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர் என அவுஸ்ரேலியக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை சிட்னிக்கு மேற்கே சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள வேக்லியின் புறநகர் பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் நடந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட பலர் மாயம்

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் கைது

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.மேலும் இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர்: தவத்திரு வேலன் சுவாமிகள்

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கிய இந்தியா

April 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகத்தின் அறிவிப்பின்படி 10,000 மெட்ரிக் தொன் வெங்காயம் ஏற்றுமதியை இலங்கைக்கு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு

April 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button