அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கிறார் பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே

Obamaஅமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே வெள்ளை மாளிகயில் இன்று(செவ்வாய்கிழமை) சந்திக்க உள்ளார். பாரீஸ் தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த இந்த சந்திப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

 

இந்த தாக்குதலில் திருப்பு முனையாக சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யா முதல் முறையாக களம் இறங்கியது. ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒருபுறம் அமெரிக்காவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளை குறித்து தாக்குதல்கள் நடத்தவில்லை என்று ரஷ்யா மீது அமெரிக்கா நேரடியாக குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தது.

 

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலை அடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த எண்ணிய பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதனையடுத்து. இந்த தாக்குதலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை கூட்டு சேர்க்க பிரான்ஸ் எண்ணியுள்ளது.

 

அதற்காக இருநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இன்று வெள்ளை மாளிகையில் பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே சந்தித்து பேச உள்ளார். அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply