சிலாவத்துறை கடற்படை முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுதீன் 

resad மன்னார் மாவட் டத்தின் சிலாவத்து றையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் அப்பிரதேச மக்களும் வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படு வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங் களிலும் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக்கத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒரு¨மைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சர் றிசாத் பதியுதீன் எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

 

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் சில மணித்தியாலய நேர அவகாசத்துக்குள் அம்மண்ணில் இருந்து பலவந்த வெளியேற்றத்திக்குட் படுத்தப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றுப்பட்ட மக்கள் 22 வருடங்களாகி புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

 

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியில் மையவாடி, பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன காணப்பட்ட போதும், அது யுத்தம் காரணமாக சிதைவடைந்து போனது.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான சூழலையடுத்து, இங்கிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது சொந்த மண்ணுக்கு திரும்ப ஆரம்பித்தனர். இந்த மீள்குடியேற்றத்திற்கு பல்வேறு தடைகளும் ஏற்பட்டு வருகின்றதையும் நீங்கள் நன்கறிவீர்கள்.

 

இதனடிப்படையில் சிலாவத்துறை கடற்படை முகாம் நகரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் வர்த்தகங்கள் மற்றும் பொதுமக்கள் இதன் மூலம் பெறும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

 

எனவே, இந்த கடற்படை முகாமை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து அம்மக்களது மீள்குடியேற்றத்தை துரித்தப்படுத்தத் தேவையான உதவிகளை செய்யுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply