ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் கூட்டுத் தாக்குதல்: ஒபாமா, ஹாலண்டே அறிவிப்பு

Obama ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கவும், பிரான்சும் இணைந்து செயல்படும் என்று இருநாட்டு அதிபர்கள் ஒபாமா மற்றும் ஹாலண்டே கூட்டாக தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த நவம்பர் 13-ம் தேதி நடத்திய பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் ஆதிக்கம் அதிகமுள்ள இடங்களில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.

 

அதற்கு பல்வேறு நாடுகளை தனது தாக்குதல் திட்டத்தில் கூட்டிணைக்க அவர் முடிவு செய்தார். முக்கியமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை ஒன்றிணைக்க நினைத்தார். முதற்கட்டமாக அமெரிக்கா சென்ற அவர் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

 

பின்னர் ஒபாமாவும் ஹாலண்டேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒபாமா பேசுகையில்,

 

”பிரான்சின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தற்போது நாம் அனைவரும் பிரெஞ்சு நாட்டவர்களே.

 

தீவிரவாதிகளுக்கும் அவர்களை அனுப்பியவர்களுக்கும் நீதியை புகட்ட நமது நாடுகளை பாதுகாக்க அமெரிக்காவும் பிரான்சும் ஒற்றுமையாக செயல்படும். அமெரிக்கர்கள் அச்சமடைய மாட்டார்கள்.” என்றார்.

 

ஒபாமா உடனான இந்த சந்திப்பை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply