தீவிரவாத தாக்குதல் எதிரொலி: துனிசியா நாட்டில் அவசரநிலை பிரகடனம்

Tunis 864-4dbc-8327-0dea9a1c8432_S_secvpfதுனிசியா நாட்டின் ஜனாதிபதி பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.துனிசியா நாட்டின் தலைநகர் துனிஸில் 26-வது கார்த்தேஜ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. இந்த விழா நடைபெறும் திரையரங்கம் அருகேயுள்ள முஹம்மது ஐந்தாவது நிழற்சாலை வழியாக ஜனாதிபதியின் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் 12 பேர் உடல் சிதறி பலியாகினர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 

இந்த தாக்குதலையடுத்து, துனிசியா அதிபர் பேஜி கெய்ப் எசெப்ஸி, சுவிட்சர்லாந்து நாட்டுக்கு செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், இந்த வேதனைக்குரிய தாக்குதலை அடுத்து இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

 

தலைநகர் துனிஸில் இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

 

மறுஉத்தரவு வெளியாகும்வரை இந்த ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply