துருக்கி மீது போர் தொடுக்கப்படுமா? ரஷ்யா விளக்கம்

russlandசிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, நேற்று காலை சுட்டு வீழ்த்தின. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள்” கூறியதுடன் இது துருக்கி – ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்ததால் துருக்கி மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் துருக்கி மீது போர் தொடுக்கும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் “போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவை ஆத்திரமூட்டுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலாக தெரிகிறது. ஆனால் துருக்கி மீது போர் தொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. துருக்கி மக்கள் மீதான எங்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், துருக்கியுடனான எங்கள் உறவை மறு மதிப்பீடு செய்வது கட்டாயம். இது போன்ற குற்றங்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply