உந்துருளி (மோட்டார் சைக்கிள்) ஆம்புலன்ஸ் திட்டம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

jeyalalithaதமிழகம் முழுவதும் இலவச மருத்துவ உதவிக்கு தற்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது.அதாவது, மருத்துவ உதவி தேவைப்படுவோர், உடனே 108 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அழைத்தால், குறிப்பிட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் வேனில் செல்லும் அவசர கால மருத்துவ உதவியாளர், நோயாளிக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதுடன், அந்த வேனிலேயே ஏற்றிச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று குணமடைய உதவுவார்.

இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஆம்புலன்ஸ் வேனால் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டது.

உடனே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இதுபோன்ற இடங்களில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் சென்று நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சையை வழங்கலாமே என்று கருத்து கூறியதுடன், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஆணையும் பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைக்கிறார்.

மொத்தம், 31 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்களையும், 10 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களையும் அவர் தொடங்கிவைக்கிறார். இந்த வாகனத்தில் உள்ள பெட்டியில் முதல் உதவி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.

கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும்போது, அந்த இடத்திற்கு உடனடியாக மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அனுப்பப்படும். இதற்காக, 108 ஆம்புலன்ஸ் வேனில் இருப்பதை போன்று, பயிற்சி பெற்ற அவசர கால மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக தொடங்கப்படுகிறது. இந்த வாகனங்களை பெண் மருத்துவ உதவியாளர் கள் இயக்க உள்ளனர். அதற் கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதின் மூலம் சிறிய பகுதிக்குள்ளும், பொதுமக்கள் கூட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த இடங்களிலும் விரைந்து சென்று நோயாளிகளுக்கு அவசர கால சிகிச்சை அளிக்க முடியும்.

முதற்கட்டமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கும்பகோணம் மகாமக திருவிழாவில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பழனி, ராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply