முட்டி மோதும் வடமாகாணசபை மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகள் ஏமாற்றத்தில் மக்கள் …

northமுதலமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு வழங்காத குற்றச்சாட்டுக்களின் கீழ் விவசாய அமைச்சரிற்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ள வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  மாற்று அணி இது தொடர்பில் முதலமைச்சரினை விசாரணை செய்யவும் கோரியுள்ளது.வடமாகாணசபை அமர்வு இன்று காலை ஆரம்பமானது முதல் உட்கட்சி குழறுபடிகளால் பேரவை திணறியவண்ணமிருந்தது. முதலில் முதலமைச்சரிற்கும் பேரவை தலைவரிற்குமிடையே பரஸ்பரம் வெடித்த கருத்து முரண்பாடுகள் பின்னர் அமைச்சர்கள் உறுப்பினர்களிடையேயான மோதலாக வெடித்தது.

அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் உத்தேச அரசியல் யாப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாதென முதலமைச்சரினை கோரும் கடிதமொன்றை தயாரிக்க வட மாகாண அமைச்சர் ஒருவர் தலைமையில் கூடிய போது அதில் பங்கெடுக்க விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மறுதலித்திருந்தார்.

அதே போன்று மீன்பிடி அமைச்சரும் தனது போலியான கையெழுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே விவசாய அமைச்சரை பழிவாங்கும் நோக்கில் அவரிற்கு எதிராக சயந்தன், ஆனோல்ட் மற்றும் அஸ்மின் உள்ளிட்டவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய தினம் வடமாகாணசபை மீன்சந்தை போன்று கத்தல்களாலும் கூச்சல்களாலும் நிறைந்து வழிந்தது. வாக்களித்த மக்களே வேதனைப்படும் வகையினில் மாகாணசபையின் போக்கு அமைந்திருப்பதாக நடுநிலையான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply