மஹிந்தவின் பாதுகாப்புக்கு மேலதிக பொலிஸ், அதிரடிப்படை

ranilமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பை அதிகரிக்க மேலதிக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று(03) தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவை பாதுகாக்க வேண்டிய தேவை சகலருக்கும் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி சபையில் முன்வைத்த ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கூறிய பிரதமர், தேர்தல் முடிவடைந்த தினமே அவர் ஆட்சியை எமக்கு கையளித்தார்.

இவர்களின் (மஹிந்த ஆதரவு அணி) தவறான வழிநடத்தல் காரணமாக எமக்கு மேலும் அதிகாரத்தில் இருக்க முடியும். ஆனால் அவரை பாதுகாக்கும் தேவை உங்களுக்குக் கிடையாது. ய

சகலருக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு சபையும், அமைச்சரவையும் முடிவு செய்துள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு கூட பொலிஸ் பாதுகாப்புத்தான் வழங்கப்படுகிறது. அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பல அமைப்புக்களின் அச்சுறுத்தல் இருக்கிறது. டொனி பிளேயர் பொலிஸ் பாதுகாப்புடனே இலங்கை வந்து சென்றார்.

இங்கு சகலருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மஹிந்தவுக்கு வழங்கும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டுமானால் அதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு அவசியம் எனின் அதனையும் வழங்க முடியும். எனக்கும், ஜனாதிபதிக்கும் கூட பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள சில இராணு வீரர்களுக்கு பயிற்சி எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அவரின் பாதுகாப்பு குறித்து அவருடன் உட்கார்ந்து பேச நாம் தயாரா இருக்கின்றோம். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். உலகில் பொதுவாக தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்படுகிறது. சரத் பொன்சோக்காவுக்கு எவ்வாறான பாதுகாப்பு அன்று வழங்கப்பட்டது. இன்று உங்களால் அதை (மஹிந்த அணி) கூற முடியுமா? அவர் யுத்தத்திற்கு முடிவுகாண பங்களிக்கவில்லையா. முடிந்தால் எழுந்து நின்று பதிலளியுங்கள். சந்திரிக்கா குமாரதுங்க குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி கண்ணை இழந்தார். அவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நான் சாதாரண பொதுமகன் எனவே எனக்கு பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் தெரியாது என்பதால் அதுபற்றி நன்கு தெரிந்த சரத் பொன்சேகா சபைக்குத் தெளிவுபடுத்துவார் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply