இஸ்லாமியவாத தலைவரின் மரண தண்டனையை உறுதி செய்தது வங்கதேச நீதிமன்றம்

dakkaவங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.இந்த விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு கடத்தல் உள்ளிட்ட அட்டூழியங்களில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், இஸ்லாமியவாத தலைவர் மோஷியர் ரஹ்மான் நிஜாமின் மரண தண்டனையை வங்கதேச உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

முன்னதாக, ஜமாட்-ஈ-இஸ்லாமி கட்சியின் தலைவரான நிஜாமிக்கு வங்கதேச உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கியது.

நிஜாமின் அனைத்து மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எந்த நேரமும் தூக்கிலிடப்படலாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கலிடா ஜியா பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் நிஜாமி(73) இடம்பெற்றிருந்தார். நிஜாமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார்.

கடந்த மாதம் மட்டும் பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட 5 பேர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். ஜமாட்-ஈ-இஸ்லாமி அமைப்பு தான் இஸ்லாமிய வன்முறைக்கு காரணம் என்று வங்கதேச அரசு கூறி வருகிறது. இருப்பினும் அந்த அமைப்பு இதனை மறுத்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply