மாணவர்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள்: அதிகாரிகளுக்கு மோடி திடீர் உத்தரவு

modiமக்களின் குறைகளைத் தீர்க்க, “துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்’ (பிரகதி) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்திலான புதிய நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி திரிபுரா, மிசோரம், உத்திரபிரதேசம், கர்நாடகம், ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் சாலை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். 

 

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மாணவர்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுங்கள் என்று அதிகாரிகளை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஆதார் அட்டை மூலம் மாணவர்கள் அடைந்து வரும் பலன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்தன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply