12 மில்லியன் பெறுமதியான ஹெரோய்ன் கண்டுபிடிப்பு; அறுவர் கைது

policeவெல்லம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.1 கிலோ 50 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 2 பெண்கள் உட்பட ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 600 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.கிரேண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 450 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 12 மில்லியன் ரூபாவாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply