போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது இந்தியர் உள்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்படுவது உறுதி மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு இறுதி ஏற்பாடு

Indonesien இந்தோனேசியாவில், போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதான இந்தியர் உள்ளிட்ட 14 பேர் சுட்டுக்கொல்லப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கான இறுதி ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.

 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த குர்தீப் சிங் (வயது 48), 300 கிராம் ஹெராயின் போதைப்பொருளை இந்தோனேசியாவுக்குள் கடத்த முயன்றதாக 2004-ம் ஆண்டு, ஆகஸ்டு 29-ந்தேதி, அங்குள்ள சோகர்ணோ ஹட்டா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

 

 

 

2005-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தபோது, குர்தீப் சிங்கின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

 

பெண் உள்பட 13 பேர்

 

இதேபோன்று பாகிஸ்தானை சேர்ந்த ஜூல்பிகர் அலி, நைஜீரியாவை சேர்ந்த 8 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் என மேலும் 13 பேருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்தது.

 

இவர்களில் மெர்ரி உட்டமி என்ற இந்தோனேசிய பெண்ணும் அடங்குவார்.

 

போதைப்பொருள் வழக்கில் ஒரே நேரத்தில் 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உலகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 

மத்திய அரசு முயற்சி

 

இந்தியர் குர்தீப் சிங்கின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் உருக்கமுடன் வேண்டிக்கொண்டனர். மத்திய அரசும் ராஜ்யரீதியில் நடவடிக்கை எடுத்தது.

 

இதுபற்றி மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில், “குர்தீப் சிங்கை காப்பாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கிடையே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக 14 கைதிகளும் அங்குள்ள நுசகம்பங்கன் தீவு சிறைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும், அவர்களை சுட்டுக்கொன்று தண்டனை நிறைவேற்றிய பின்னர் உடல்களை எடுத்து வருவதற்காக 14 சவப்பெட்டிகளுடன், ஆம்புலன்சுகளும் போய்ச் சேர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

 

நள்ளிரவுக்கு பிறகு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply