காணாமல்போனோர் உயிருடன் உள்ளனர் எனும் உணர்விலேயே உறவுகள் அரசுக்கு கடப்பாடு உள்ளது என்கிறார் :பிரதமர் ரணில்

RANILயுத்­தத்தின் போதும் யுத்­தத்தின் பின்­னரும் காணாமல் போன­வர்கள் இன்னும் உயி­ருடன் இருக்­கின்­றனர் என்ற உணர்­வி­லேயே அவர்­க­ளது உற­வி­னர்கள் இருந்து வரு­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்­பிலும் அது குறித்து கண்­ட­றிய வேண்­டி­யதன் கடப்பாடு தொடர்­பிலும் நல்­லாட்சி அர­சாங்கம் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

விகி­தா­சார தேர்தல் முறை­மையில் விளை­வாக வடக்கில் அதி­க­மான தமிழர் பிர­தி­நி­தித்­து­வங்­களும் தெற்கில் அதி­க­மான சிங்­கள பிர­தி­நி­தித்­து­வங்­களும் உரு­வா­கின எனவே சுமுக­­மான அர­சியல் சூழல் ஒன்றை உரு­வாக்க வேண்­டிய தேவையும் உரு­வாகி உள்­ளது என்று பிரதமர் சுட்­டிக்­காட்­டினார்.

பம்­ப­லப்­பிட்டி ஓசோ ஹோட்­டலில் யாழ்ப்­பாணம் ஹாட்லி கல்­லூரி பழைய மாண­வர்கள் சங்கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பிர­தம விருந்­தி­­ன­ராக பங்­கேற்று உரை­யாற்றுகையி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­பட்ட மாற்­றத்­திற்கு தமிழ் மக்­களின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தேர்ந்­தெ­டுத்து பாரிய வர­லாற்று மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினர்.

இலங்­கை­யி­லுள்ள அனைத்து மக்கள் குழுக்­க­ளையும் இலங்­கையர் என்ற கண்­ணோட்­டத்­தி­லேயே பார்க்­கிறோம். தந்தை செல்­வ­நா­ய­கத்தின் காலத்தில் குறிப்­பாக 1979 ஆம் ஆண்­டு­களில் கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச் சட்டம், 2009 ஆம் ஆண்­டு­ வ­ரையில் யுத்தம் தொடரவும் இன முரண்­பா­டுகள் வளர்ச்­சி­ய­டை­வ­தற்கும் கார­ண­மாக இருந்­தது.

மேலும் இலங்­கையில் ஏற்­பட்ட சிவில் யுத்தம் வெறு­மனே இனங்­க­ளுக்கி­டை­யே மட்­டு­மல்ல. இதனை விடவும் இலங்­கைக்குள் அதா­வது வடக்கு பகு­தியில் வாழும் மக்­க­ளி­டையே மற்றும் தென்­ப­கு­தியில் வாழும் மக்­க­ளுக்­கி­டை­யிலும் பயங்­க­ர­வாதம் பர­வி­யி­ருந்­தது.

குறிப்­பாக தென்­ப­கு­தியில் 1977,1979 ஆம் ஆண்­டு­களில் வடக்கு கிழக்கை பொறுத்­த­மட்டில் பல சந்­த­தி­யி­ன­ருக்­கி­டையில் யுத்தம் மற்றும் அதன் பாதிப்­புகள் பர­வி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சி வடக்கு மற்றும் தெற்கு மக்­க­ளுக்­கி­டையில் சுமுக­மான உறவை ஏற்­ப­டுத்துவதில் அக்­க­றையுடன் செயற்­பட்டு வந்­துள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துவதற்­கான பல வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு எதிர்­க்கட்­சியின் பங்­க­ளிப்பும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது.மேலும் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பு என்­பது நீண்­ட­கால பொறி­மு­றையை கொண்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது.

இதில் இரண்டு பிர­தான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முத­லாவ­தாக யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யிலும் அதன் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் போன மக்கள் என்ன ஆனார்கள் என்­பது தொடர்­பிலும் அவர்­களை கண்­ட­றிய வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் நல்­லாட்சி அர­சாங்கம் அதிக கவனம் செலுத்தி வரு­கின்­றது.

காணாமல் போனோர் தொடர்­பி­லான அலு­வ­ல­கத்தின் மூலம் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் காணாமல் போன தங்­க­ளது உற­வுகள் இன்னும் உயி­ருடன் இருக்­கி­ன்றார்கள் எனும் உணர்ச்­சி­பூர்­வ­மான நிலையில் மக்கள் உள்­ளனர். எனவே நாம் இது தொடர்பில் கூர்­மை­யாக ஆராய வேண்டும்.

அடுத்த­தாக உண்­மையை கண்­ட­றிதல் மற்றம் நல்­லி­ணக்க ஆணைக்­குழு மூலம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் உண்­மையை கண்­ட­றி­வதன் அவ­சியம் தொடர்பில் அதிக அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. சமூ­கத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சம­யங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­த­ப்பட வேண்டும். அதற்கு அனைத்­து­மதத் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். இதற்கு சம­யச்­ச­பைகள் அதிக பங்­க­ளிப்பு செலுத்­து­கின்­றன.

சில சந்­தர்ப்­பங்­களில் சட்ட நட­வ­டிக்கை எடுத்தல் என்­பது பொருத்­த­மான­தாக இருக்­கின்ற போதும் அது அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பொருந்­தாது எனவே சமூக தலை­வர்கள் இதற்­கான முக்­கிய பங்­கு­தாரர்­க­ளாக உள்­ளனர்.

கடந்த காலங்­களில் புலி­க­ளு­ட­னான யுத்தம் சிவி­லி­யன்­க­ளு­ட­னான மோதல் மற்றும் விடு­தலைப்புலிகள் தென்­ப­கு­தியில் உள்ள முக்­கி­ய­மான அர­சியல் தலை­வர்­களை இலக்­கு­ வைத்­தனர், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் ஊட­ாக மோதல் என ஒரு கால­கட்­டத்தில் யாருடன் யார் மோதிக்­கொள்­கி­ன்றார்கள் என்­பதே தெரி­யாமல் போயி­ருந்­தது. தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­களை பற்­றியும் சிங்­க­ள­வர்கள் தமி­ழர்­களை பற்­றியும் குறை­கூறி நூல்­களை எழு­து­கின்­றனர்.

இவ்­வ­கை­யான கடந்­த­கால அனு­ப­வங்­களை வைத்து மக்­க­ளுக்­க­ிடையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மக்கள் மனதில் ஏற்­பட்­டுள்ள மாறுபட்ட கருத்­துக்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும். அது மட்­டு­மல்­லாது தற்­போது இலங்­கையின் சனத்­தொகை பரம்­பலில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஒரு­புறம் வடக்கு கிழக்கு பகு­தி­களில் சனத்­தொகை சடு­தி­யாக குறை­கின்ற போது மேல்­மா­கா­ணத்தில் தமிழ் மக்­களின் சனப் பரம்பல் சடு­தி­யாக அதி­க­ரிக்­கின்­றது.

குறிப்­பாக வத்­த­ளை­யி­லி­ருந்து ரத்­ம­லானை மற்றும் கொழும்பு தேர்தல் தொகுதிஇ கொலன்­னாவ, காலி முகத்­தி­டலை அண்­டிய பகு­தி­களில் தமிழ் மக்­களின் சனப்­ப­ரம்பல் கணி­ச­மான அதி­க­ரிப்பை காட்­டு­கின்­றது. மேலும் கொழும்பில் வெள்ளவத்­தை­யி­லேயே நிலத்­துக்­கான பெறு­மதி மிகவும் அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. இதுவும் சனத்­தொகை பரம்­பலில் முக்­கி­ய­மான தாக்கம் செலுத்தும் விட­ய­மாகும்.

மேலும் கிராமப் புறங்­களில் இருந்தும் அதி­க­ள­வான மக்கள் நக­ரத்தை நோக்கி படை­யெ­டுக்­கின்­றனர். குறிப்­பாக கொழும்பு, கண்டி, மாத்­தளை ஆகிய பகு­தி­க­ளுக்கு அதி­க­ளவில் இடம்­பெ­யர்­கின்­றனர். மலை­ய­கத்தில் லயன் அறையில் வாழும் மக்கள் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு வெளியே வாழ்­வ­தனை அதிகம் விரும்­பு­கின்­றனர். அத்­தோடு மலை­யகத்தில் உள்ள இளை­ஞர்கள் தற்­போது லயன் அறை­களில் வாழ விரும்­பு­வ­தில்லை. பெரும்­பா­லான மக்கள் தற்­போது அம்­பாந்­தோட்­டைக்கு இடம்­பெ­யர்­கின்­றனர்.

அத்­தோடு நாடு­மு­ழு­வதும் ஹோட்டல் துறை­களை மேம்­ப­டுத்தி பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனால் நாட்டில் மிகப்­பெ­ரிய இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெ­று­கின்­றன. மேலும் இலங்கை மக்­க­ளி­டையே பாரம்­பரிய கலா­சாரம் வேரூன்­றிய பொழுதும் வெகு­சன ஊடக கலா­சா­ரமும் அதி­க­ளவில் பர­வி­யுள்­ளது.

எமது நாட்­டவர் ஆடை அணியும் விதம், பேச்­சு­வ­ழக்கு, உள்­ளிட்ட விட­யங்கள் ஆகி­ய­வற்­றிலும் பொலிவூட், ஹொலிவூட் பாணியில் மாறி­வ­ரு­கின்­றது. இதுவே உலக மய­மாக்­கலின் விளை­வாகும். அதே­நேரம் இன்று நினைத்­த­ மாத்­தி­ரத்தில் எங்கும் சென்று மீளத்­தி­ரும்­பு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த கட்­ட­மாக அர­சி­ய­ல­மைப்பின் பக்கம் பார்க்­கின்ற போது தேர்தல் முறை­மையில் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறைமை பாரிய தாக்­கத்­தினை செலுத்­தி­யது. மேலும் தற்­போது தொகு­தி­வாரி முறையின் அவ­சியம் தொடர்­பிலும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. குறிப்­பாக விகி­தா­சார தேர்தல் முறை­மையில் வெற்­றி­பெற்ற கட்சி மட்­டுமே முழு­மை­யான ஆதிக்­கத்தை செலுத்தும். குறிப்­பாக இவ்­விரு தேர்தல் முறை­க­ளி­லுமே ஆசனப்பங்­கீடு தொடர்பில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் மக்கள் பிர­தி­நி­தித்­துவத்­தினை முறை­யாக ஒழுங்­கு­ப­டுத்த முடி­யா­துள்­ளது. என­வே தான் தற்­போது ஜேர்­ம­னிய கலப்பு பாணி­யி­லான பிர­தி­நிதித்­துவ முறைமை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்­து­கின்றோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் உரு­வா­கி­யுள்ள பிர­சா­ரங்­க­ளுக்கு மத்­தியில் பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை அதி­கார முறை­மையின் தேவை தொடர்­பிலும் குறித்த தேர்தல் முறைமை தெரிவு அதிகம் தாக்கம் செலுத்தும். இதுவே வடக்கு பகு­தியில் தமி­ழரும் தென் பகு­தியில் சிங்­க­ள­வரும் ஆதிக்கம் செலுத்த கார­ண­மாக அமைந்­தது.

அதி­கார பர­வ­லாக்­கத்தை நோக்கும் போது நாம் மூன்றாம் நிலை அதி­கார பர­வ­லாக்கம் குறித்து யோசிக்க வேண்டும். நாட்டின் பாது­காப்பு தொடர்­பிலும் எல்­லை­களை கடந்த இலங்­கையின் மாகாண மட்­டத்­தி­லான அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பிலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கடந்து அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு தேவை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க உள்ளோம்.

இந்­நி­லையில் நாம் சகல நாடு­க­ளு­டனும் சுமுக­மான உறவைப் பேண எத்­த­னிக்­கின்றோம். நாம் புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை இலங்­கையின் பொரு­ளா­தாரம் 500 பில்­லி­யனை தாண்டிச் செல்­கின்­றமை வர­வேற்­கத்­தக்கது.

தெற்­கி­லுள்ள மக்கள் வடக்கிற்கு செல்லவும் வடக்கில் உள்ளவர்கள் தெற்கிற்கு செல்லவும் சுமுகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.

அதனை அடையும் முயற்சியினையே தற்போது மேற்கொண்டு வருகின்றோம். எனவே பாடசாலைக ளுக்கிடையில் புதிய புரிந்துணர்வின் அடிப்படையிலான கலாசாரம் ஒன்று உருவாக்கப்படும்.

இதன் அடிப்படை யிலேயே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குஇ கிழக்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக ஹாட்லி கல்லூரி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டிருந்தது. அந்நேரத்தில் நான் குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த போது அப்பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான எவ்வித சூழ்நிலையும் காணப்படவில்லை. ஆனாலும் அவ்வருடத்தில் குறித்த பாடசாலை தேசிய ரீதியில் சாதனை செய்திருந்தது.

எனவே நாம் கல்வியின் மூலமே அபிவிருத்தியடைய முடியும் அதற்கான கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply