துருக்கி போலீஸ் தலைமையகம் குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் பலி: குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்பு

trukyதுருக்கி நாட்டில் உள்ள சிஸ்ரேவில் போலீஸ் தலைமையகம் அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்றுள்ளது.11 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் கவர்னர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி ராணுவம் சிரியாவில் உள்ள ஐ.எஸ் ஜிகாதிஸ்ட் மற்றும் சிரிய குர்தீஷ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு தினங்களில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் கட்டடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கட்டுப்பாட்டு மையம் அருகில் நடைபெற்றதாக அரசு தரப்பு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சிஸ்ரே, குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாகும். இங்கு குர்தீஸ் தொழிலாளர் கட்சி படைக்கும், அரசு தரப்பு படைக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply