கடத்தல், கொலை இடம்பெறும்போது பொலிஸ் தினம் அனுஷ்டிப்பதில் பலனில்லை :ரணில் விக்கிரமசிங்க

RANILபொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதுள்ள நிலையில் பொலிஸ் நினம் அனுஷ்டிப்பதில் பயனில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட அமைச்சர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.பொது மக்களின் முழுமையான பாதுகாப்புக்கு பொலிஸ் திணைக்களமே பொறுப்பு. நாட்டு மக்கள் சந்தேகம், அச்சம் இன்றி செயற்படும் சூழலை உருவாக்குவது அவர்களது பணியாகும் எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பம்பலப்பிட்டிய வர்த்தகர் சகீப் சுலைமான் கொலை தொடர்பிலான விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிஸ் தின நிகழ்வைக் கொண்டாடுவதில் பயனில்லை.

குற்றத்தடுப்பு போன்று போதை ஒழிப்பு தொடர்பிலும் புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் அலரி மாளிகைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply