ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ANGELAஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.அதற்காக விமானம் மூலம் செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் புறப்பட்டு வெளியே வந்தார்.

அவரது காருக்கு பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பாக அணி வகுத்து சென்றன. மெர்கலின் கார் விமான நிலையத்துக்கும் தலைமை அலுவலகத்துக்கும் இடையே சென்று கொண்டிருந்த போது கறுப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று திடீரென போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் புகுந்து அணிவகுப்பில் கலக்க முயன்றது.

அதை கண்காணித்த போலீசார் மெர்சிடிஸ் காரில் வந்த நபரை எச்சரித்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பின் தொடர்ந்தார். எனவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அந்த காரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த காரை சோதனை நடத்தினர். அதில் ஒரு வாலிபர் மட்டுமே இருந்தார். அவரிடம் ஆயுதம் இல்லை. ஆனால் காரில் போலீசார் பயன்படுத்தும் சிறுதடி, கண்ணீர் புகைகுண்டுகள் வீச பயன்படுத்தும் கருவி , சிமெண்ட் கட்டைகள், கை விலங்குகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மூலம் தாக்குதல் நடத்த முடியும்.

எனவே, அந்த நபர் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். எனவே அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஏஞ்சலா மெர்கல் செக் நாட்டின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜெர்மனியில் அகதிகள் தங்க மெர்கல் அனுமதி அளிப்பதற்கு எதிராக இப்போராட்டம் நடந்தது. ஐரோப்பாவை மெர்கல் கொன்று விடுவார் என்ற வாசகம் அடங்கிய பேனர்களை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply