சிரியாவில் துருக்கி குண்டு வீச்சு , பீரங்கி தாக்குதல் 35 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

siriyaசிரியாவில் துருக்கி நடத்திய குண்டுவீச்சு, பீரங்கி தாக்குதலில் 35 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.உள்நாட்டுப்போர் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுடன் கிளர்ச்சியாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையால் அங்கு இதுவரை சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 லட்சம் பேர் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியால் தற்போது அங்கு சண்டை நிறுத்தப்பட்டுள்ளது.புதுப்பிப்பு முயற்சி

 

இருந்த போதிலும் அலெப்போ உள்ளிட்ட பகுதிகளில் சண்டை நிறுத்தம் இரு தரப்பினராலும் மீறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிரியா முழுவதும் போர் நிறுத்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷியா முயற்சிகள் எடுத்து வருகின்றன.இந்த முயற்சிகள் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என தெரியவில்லை.35 பேர் பலி

 

இதற்கிடையே சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரையும், குர்து இன படைகளையும் குறி வைத்து துருக்கி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.நேற்று துருக்கி 5–வது நாளாக தனது தாக்குதல்களை தொடர்ந்தது. ஜராபுலஸ் நகருக்கு தெற்கேயுள்ள ஜெப் எல் குசா என்ற கிராமத்தில் நேற்று துருக்கி தீவிர குண்டு வீச்சில் ஈடுபட்டது. மற்றொரு புறம் பீரங்கி தாக்குதல்களையும் நடத்தியது. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகள் காப்பகம் கருத்து தெரிவிக்கையில், ‘‘சிரியாவுக்குள் துருக்கி எல்லைதாண்டிய தாக்குதல்களை நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்’’ என கூறியது.ஜராகுலஸ் நகருக்கு தெற்கில் உள்ள அல் அமர்நெஹ் நகரில் துருக்கி விமானங்கள் நடத்திய மற்றொரு குண்டுவீச்சில் 15 அப்பாவி மக்கள் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.துருக்கியின் விருப்பம்

 

மேலும், சிரியாவில் குர்து இனத்தவரின் ஆளுகையின்கீழ் உள்ள இடத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) துருக்கி நடத்திய தாக்குதல்களின்போது, அந்த நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.துருக்கி எல்லையில் குர்து இன படைகள் புதிதாக எந்த இடத்தையும் கைப்பற்றி விடக்கூடாது என்பதில் துருக்கி கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. எனவே குர்து படையினர் தலையெடுத்து விடாமல் காப்பதில் துருக்கி கவனம் செலுத்தி வருகிறது. அதன்வெளிப்பாடாகத்தான் சிரியாவில் துருக்கி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply