ஜெர்மனியில் இந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைவார்கள்: அதிகாரிகள் தகவல்

REFUGEஉள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான மக்கள் அகதிகளாக படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோல், ஈராக் உள்ளிட்ட சில வளைகுடா, அரபு நாடுகளில் இருந்தும் அகதிகளாக மக்கள் வெளியேறுகின்றனர்.அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய யூனியனுக்கு செல்பவர்கள் கிரீஸ் வழியாகத் தான் செல்ல முடியும். இவ்வாறு வரும் அகதிகளில் பலர் படகு கவிழ்ந்து வழியிலேயே இறந்து போகின்றனர்.

இதனையும் தாண்டி, நிறைய மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.இந்நிலையில், ஜெர்மனியில் இந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைவார்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.

இது கடந்த 2015-ம் ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவானது என்று குடியேறுபவர்கள் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.ஜெர்மனி சுகாதார துறையின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலே அகதிகள் வருகையின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply