ஆயுதப் போராட்டத்தை கைவிட்டது கொலம்பிய கிளர்ச்சிக்குழு ஃபார்க்

kolampiaகொலம்பியாவின் பெரும் கிளர்ச்சிக் குழுவான ஃபார்க், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தியிருக்கிறது. இதன் மூலம், உலகின் மிக நீண்ட மற்றும் மோசமான பிரிவினைவாதப் போராட்டம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.நள்ளிரவு முதல் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என தனது போராளிகளுக்கு ஃபார்க் குழுவின் தலைவர் டிமோசென்கோ உத்தரவிட்டுள்ளார். அது மீறப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அரசுக்கு எதிரான நீண்ட போர் முடிவுக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த நிலையை அடைவதற்கான அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு, ஐம்பது ஆண்டுகளாக நடக்கும் போரில், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தனர்.

உறுதியான அமைதி உடன்படிக்கை, அடுத்த சில வாரங்களில் கையெழுத்தாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply