சிரியாவில் அலெப்போவில் 8 மணி நேரம் சண்டை நிறுத்தம் ரஷியா அறிவிப்பு

siriya சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் 8 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது.உள்நாட்டுப்போர் சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அவ்வப்போது சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும், நீடிப்பதில்லை. கடந்த மாதம் அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக அறிவித்த சண்டை நிறுத்தமும் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கவில்லை.இந்த நிலையில் அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள முக்கிய நகரமான அலெப்போ நகரத்தை மீட்பதற்கு அதிபர் ஆதரவு படைகளும், அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள ரஷிய படைகளும், வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.இதில் அப்பாவி மக்களும் சிக்கி, பலி ஆகி வருவது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகள் பலியாவதை தடுக்க சண்டை நிறுத்தம் செய்யவேண்டும் என்று சமீபத்தில் போப் ஆண்டவர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

 

36 பேர் கொன்று குவிப்பு இதேபோன்று மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு ஏற்ற வகையில், அலெப்போவில் முற்றுகையிடப்பட்ட மாவட்டங்களில் வாரம் தோறும் குறைந்தது 48 மணி நேரமாவது சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் ஐ.நா. மனிதாபிமான உதவிகள் பிரிவின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.ஆனாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. சிரியாவும், ரஷியாவும் கூட்டுசேர்ந்து உக்கிரமான வான்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன.அங்கு இரு படைகளும் சமீபத்தில் நடத்திய வான்தாக்குதல்களில், குழந்தைகள் உள்பட 36 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.சண்டை நிறுத்தம்

 

இந்த நிலையில், அலெப்போவில் கிழக்கு மாவட்டங்களில் 8 மணி நேரம் சிரிய படைகளும், ரஷிய படைகளும் தாக்குதல்களை நிறுத்தும் என்று ரஷியா அறிவித்துள்ளது.இதுபற்றிய அறிவிப்பில், ‘‘அலெப்போவில் 20–ந் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும். அந்த நேரத்தில், பொதுமக்களும், போராளிகளும் பத்திரமாக நகரை விட்டு வெளியேறி விட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விட்டலி சுர்கின் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘8 மணி நேர தாக்குதல் நிறுத்தம் என்பது ஒருதலைபட்சமானது. குறைந்தது 48 மணி நேரம் அல்லது 72 மணி நேரம் சண்டை நிறுத்தம் தேவை’’ என கூறினார்.இதேபோன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனரும், ‘‘8 மணி நேரம் சண்டை நிறுத்தம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது மிகவும் குறைந்த காலகட்டம். மிகவும் தாமதமான சண்டை நிறுத்தம்’’ என கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply