பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தோனேசியா பாராளுமன்றம் ஒப்புதல்

அதிக அளவு கார்பன் வெளியேறுவதன் காரணமாக பூமி வெப்பமயமாகி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கும் அபாயம்paris ஏற்பட்டு உள்ளது. எனவே, கார்பன் அதிகம் வெளியேறுவதை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பூமியின் வெப்பத்தை 2 செல்சியஸ் வரை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக பாரிசில் நடந்த ஐ.நா.சபை நாடுகளின் உச்சி மாநாட்டில் புவி வெப்பமாதலுக்கு காரணமான வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், இந்தோனேசியாவும் இந்த ஒப்பந்தத்தில் இணைய அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இதற்கு சம்மதித்ததையடுத்து, இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் சட்டம் ஆவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

உலகின் அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. வெப்பமண்டலக் காடுகளில் ஏற்பட்ட தீ காரணமாக கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தோனேசியாவில் அதிக அளவுக்கு காடுகள் அழிக்கப்படுவதும் பருவநிலை மாற்றத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் நவம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. மொராக்கோ நாட்டில் நவம்பர் மாதம் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு மேலும் சில நாடுகள் இந்த மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply