ஹிலாரி மோசமான பெண்: நேரடி விவாதத்தில் டிரம்ப் ஆவேசம்

trumpஅமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இதில், ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்கள் முன்னிலையில் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம்.அதன்படி ஹிலாரி கிளிண்டன்- டொனால்டு டிரம்ப் இடையே ஏற்கனவே 2 விவாதங்கள் நடந்தன.

இன்று 3-வது விவாதம் லாஸ்வேகாசில் நடந்தது. இதில், இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர். ஹிலாரி கிளிண்டன் மீது டொனால்டு டிரம்ப் ஆவேசமான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இது சம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும் போது, ஒரு பெண் என் மீது பொய்யான செக்ஸ் குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அந்த பொய்யை உண்மை போல் மாற்றி ஹிலாரி கிளிண்டன் பிரசாரம் செய்கிறார். ஹிலாரி ஒரு பொய்யான பேர்வழி. இவர் ஒரு மோசமான பெண்.

இவரை ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்து எடுக்க கூடாது. ஒரு வேளை இவர் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றியை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.30 ஆண்டுகளாக ஹிலாரி அரசியலில் இருக்கிறார். இவரால் இந்த நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்று பேசினார்.இதற்கு பதில் கூறிய ஹிலாரி, மக்கள் மத்தியில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு இல்லை. எனவேதான் தேவையற்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார் என்று கூறினார்.

மேலும் ஹிலாரி கூறும் போது, நான் அதிபர் ஆனால், பெண்கள் நலன் மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றார்.டொனால்டு டிரம்ப் கூறும் போது, கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவேன். துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டுவேன் என்றார்.ஹிலாரி கிளிண்டன் பேசும் போது, ரஷிய அதிபர் புதின் டெனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதையே விரும்புகிறார். அவர் டொனால்டு டிரம்பை பொம்மையாக ஆட்டி படைக்கலாம் என கருதுகிறார் என்று கூறினார்.

அதற்கு பதில் கூறிய டிரம்ப், புதினை எனக்கு யார் என்றே தெரியாது. ஆனாலும் அவர் என்னைப் பற்றி நல்ல கருத்தைதான் கூறி இருக்கிறார் என்றார்.மேலும் பத்திரிகைகள் தனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டு வாக்காளர்களை குழப்பி வருகின்றன என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply