திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் 5 வரை விளக்கமறியலில்

thisaமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பிலான போலி ஆவணங்களை வெளியிட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த தேர்தல் காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து கட்சி தாவினார்.சிறிது காலம் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

 

எவ்வாறிருப்பினும் அந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

இந்தநிலையில் திஸ்ஸ வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,அவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 

எனினும் சட்டமா அதிபரால் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

இதன்போது, அவரை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply