இத்தாலி பிரதமருக்கு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை

இத்தாலி பிரதமர் பாவ்லோ ஜென்டிலோனிக்கு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவரது செய்தி தொடர்பு பெண் அதிகாரி பிளேமினியா லெய்ஸ் கூறும்பொழுது, ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையினை தொடர்ந்து, 62 வயது நிறைந்த கடந்த மாதம் பதவியேற்ற பிரதமரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

அவருக்கு நேற்றிரவு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.  அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை முறை பற்றிய தொடர்ச்சியான தகவல்கள் வெளியாகவில்லை.

 

ஜென்டிலோனி நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார்.  அங்கு பாரீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே உடன் அவரது சந்திப்பு நடந்தது.  அதனை அடுத்து வியாழகிழமை பிரதமர் தெரசா மே உடன் சந்தித்து பேசுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

 

பிரதமர் மேட்டியோ ரென்ஜி தனது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முயற்சியில் பதவி இழந்ததனை அடுத்து ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜென்டிலோனி பிரதமரானார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply