தேசிய ஒற்றுமைக்காக கவலைப்படும் : டிலான்

புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பதோடு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு அமைக்கப்படும் புதிய அரசியலமைப்பு வீதியில் பயணிப்பதற்கு தயாராக முடியும் என ‘புதிய நோக்கத்தின் ஆரம்பம்’ வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்களடி வீதி அமைப்பதற்கான ஆரம்பம் நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த புதிய அரசியல் வேலைத்திட்டத்தை வரவேற்க தயாரில்லை எனில் இடம்பெறும் அபிவிருத்தியில் பயன் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் ஒரு முறை மதவாதிகளுக்கு, இனவாதிகளுக்கு தேவையான முறையில் செயல்படுவதற்கு இடமளித்தால் கட்டியெழுப்பப்படும் புதிய செயன்முறைகள் குண்டுதாக்குதலுக்குள்ளாவதற்கு நீண்ட காலம் செல்லாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் இந்த ஆண்டு எந்த பிரச்சினை இருந்தாலும் இன்று புதியதோ அல்லது திருத்தப்பட்ட அரசியலமைப்பின் ஊடாக மக்களின் விமர்சனம் இன்றி தேசிய வாழ்வாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஆண்டாக அமையும் என தெரிவித்த அமைச்சர் அதிகாரப் பகிர்வு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply