1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளால் 1,802 பேர் படுகொலை!

விடுதலைப் புலிகளால் 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,802 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, அரசாங்கம் அறிவித்தது.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த 1,802 பேரில் சிங்களவர்கள் 589 பேரும் தமிழர்கள் 1,025 பேரும், முஸ்லிகள் 188 பேரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள் என்றடிப்படையில் பார்த்தால், ஈ.பி.டி.பி., டி.என்.வி.பி, டெலோ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களில் தலா இருவரும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சேர்ந்த அறுவரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு மதத்துக்குரிய மதத் தலைவர்கள் அல்லது மதத்தைச் சேர்ந்த மக்கின் எண்ணிகையின் அடிப்படையில் பார்த்தால், பௌத்தர்கள் 589 பேரும், இந்துக்கள் 1,025 பேரும் முஸ்லிம்கள் 188 பேரும் அடங்குவர் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் அரச அலுவலர்கள் 522 பேரும் அடங்குவதாக அமைச்சர் பதிலளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply