65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர்

நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஷ்வரூபம் படம் விவகாரம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார்.இதற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் கருத்துக்கு பதில் அளித்தார்.

இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரிந்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசுகிறார். ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல். எந்த கிராமத்திற்காவது சென்று அவர் மக்களை சந்தித்திருப்பாரா? குற்றம்சாட்டுபவர்கள் ஆட்சியில் என்ன குற்றம் கண்டு இருக்கிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply