இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் ராணுவ நிதி உதவி குறைக்கப்படும்: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் நடைபெறும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ சேவைகள் கமிட்டியின் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் ராணுவ உளவுத்துறை இயக்குனர் லெப்டினெட் ஜெனரல் வின்சென்ட் ஸ்டீவர்ட் பேசினார்.பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில், வைத்துள்ளது. எனவே, அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இந்தியாவை நம்பி உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சி நடைபெறவும், அமைதி நிலவுவதையும் பாகிஸ்தான் விரும்பவில்லை.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு தீவிரவாதிகள் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது. ஹக்கானி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரமாட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அங்கு 20 தீவிரவாத குழுக்கள் உள்ளன.

அவர்களை அழிக்க வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மட்டுமல்ல. ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். எல்லை தாண்டும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது.

இந்தியாவில் காஷ்மீருக்குள் ஊடுருவ செய்கிறது. எனவே தூதரக ரீதியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எல்லை தாண்டும் தீவிரவாதத்தால் தான் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தை தடைபட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து உருவாக்குகிறது. அவர்களை ஆப்கானிஸ்தானில் மறைமுகமாக தங்கவைத்து இந்தியா மீது தாக்குதல் நடத்த அனுப்புகிறது. இத்தகைய நடவடிக்கை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி குறைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply