மீட்புப் பணிகளில் ஹெலிக்கொப்டர்கள், அதிவேகப் படகுகள்

தெற்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், மண்சரிவு காரணமாகவும் நிர்க்கதியாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து வருவதற்காக விமானப் படையும், கடற்படையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. விமானப் படையின் மூன்று பெல் 212 ரக ஹெலிகொப்டர்களும், பெல் 412 ரக ஒரு ஹெலிக்கொப்டரும், எம். 17 ரக இரண்டு ஹெலிக்கொப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

 

இதேவேளை, கடற்படையினர் தென்பகுதிக்கு 11 மீட்புக் குழுக்களும், மேல் மாகாணத்துக்கு 17 மீட்புக் குழுக்களுக்காக 28 குழுக்களை மீட்பு பணிக்காக அனுப்பியுள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தலா ஒரு டிங்கி அதிவேக படகு வீதம் 28 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தென் பகுதிக்குச் சென்ற மீட்புக் குழு இதுவரை 357 பேரை மீட்டு பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைத்து வந்துள்ளன.

 

இரத்தினபுரி பதுரலிய பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 200 பேரை கடற்படையினர் நேற்று மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர்.

 

குடலிகம பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 64 பேரை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர்.

 

இதில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்ததாகவும் அவரை பாதுகாப்பாக ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவும் கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply