ரஷ்யா மீதான புதிய தடைகள் தீமையானவை : புடின்

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக புதிய தடைகளுக்கு சட்டம் கொண்டு வர வாக்களித்தது. மேலும் அதிபர் டிரம்ப் ஏற்கனவேயுள்ள தடைகளை தளர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் எனவும் அது வாக்களித்தது.“இது இருநாட்டிற்கு இடையிலான உறவை சிக்கலாக்கும். இது தீமைத்தருவது” என்று புடின் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

எப்படி தடைகளுக்கான சூழல் உருவானது என்று நான் பார்க்க வேண்டும் என்றார் புடின். அதனால் முன்கூட்டியே நாங்கள் எப்படி பதிலடி கொடுப்போம் என்பதை வெளிப்படையாக கூற முடியாது என்றார் புடின்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தடை சச்சரவு ரஷ்யா கிழக்கு உக்ரைனின் பிரிவினைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தப் போது ஏற்பட்டது. அமெரிக்க தடை ரஷ்யாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. பதிலடியாக மேற்கத்திய நாடுகளிடமிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. எனினும் இத்தடை சராசரி ரஷ்ய மக்களின் உணவுத் தேவைகளை பாதித்தது. உணவுப் பொருட்களின் விலையுயர்வைத் தவிர்க்க முடியாமல் போனது.

இந்த வரிசையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக வெளியான செய்தியை ஒட்டி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய தடைகளை கொண்டு வர தீர்மானம் செய்துள்ளனர். முன்னதாக தடை பற்றிய செய்தியை புடின் மறுத்து அவை அமெரிக்க அரசியல் பிரச்சினைகளால் ஏற்பட்டவை என்று கூறி வந்தார். அமெரிக்க எப்போதும் இது போன்ற அணுகுமுறைகளை ரஷ்யாவை கட்டுப்படுத்தி வைக்க கைக்கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply