புதுடெல்லி: ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார நபர்

தலைநகர் டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிண்டாபூர் என்ற இடத்தில் வசிக்கும் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர், தன் வீட்டின் அருகே வசிக்கும் உறவுக்கார ஆறு வயது சிறுமியை அங்குள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாடுவது போல் நடித்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி கூக்குரலிட்டு அழுதுள்ளார். இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர்கள் அங்கு வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply