கத்தார், அரபு அண்டை நாடுகளின் நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாது: டில்லர்சன்

கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார்.

செளதி மற்றும் பிற நாடுகள் கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்துகின்றன; ஆனால் கத்தார் அதனை மறுக்கிறது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு கத்தாரின் மீது ராஜிய மற்றும் பொருளாதார தடைகள் நிலவும் நிலையில், இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிடமிருந்து அதிகப்படியான உணவுகள் மற்றும் பிற பொருட்கள் கத்தாருக்கு விநியோகிக்கப்படுகின்றன.

வரும் வெள்ளியன்று அதாவது 10 நாட்களுக்குள், இரானுடனான உறவை கத்தார் குறைக்க வேண்டும்; துருக்கிய ராணுவ தளத்தை மூட வேண்டும் என இந்த நான்கு நாடுகள் விரும்புகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply