ரூ.40 லட்சம் கோடியில் பாதுகாப்பு துறை பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.40.3 லட்சம் கோடி ஒதுக்குவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான திருத்த மசோதாவும் நிறை வேறியது.அமெரிக்காவில் வரும் அக்டோபர் 1-ம் தேதி அடுத்த நிதியாண்டு (2018) தொடங்குகிறது. இதற்காக அமெரிக்க நாடாளு மன்றத்தில் ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஒப்புதல் சட்ட (என்டிஏஏ) 2018 மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.40.3 லட்சம் கோடி ஒதுக்க வகை செய்யும் இந்த மசோதா நிறை வேறியது. முன்னதாக இதற்கு 344 உறுப்பினர்கள் ஆதரவும் 81 உறுப்பி னர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த மசோதாவின் ஒரு பகுதி யாக, இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய-அமெரிக்க எம்.பி. அமி பேரா ஒரு திருத்த மசோதா கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா இடை யிலான பாதுகாப்புத் துறை ஒத்து ழைப்பை பலப்படுத்துவது தொடர் பான வியூகங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் வகுக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதற்காக 180 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமி பேரா கூறும்போது, “இந்த மசோதா நிறைவேறி இருப்பதற்கு நன்றி. அமெரிக்கா உலகின் பழமையான ஜனநாயகம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்காக வியூகம் வகுக்க வேண்டியது மிகவும் முக்கியம்” என்றார்.

அடுத்தபடியாக இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் (மேலவை) நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பாகிஸ்தானுக்கு நிபந்தனைகள்

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ் தானுக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதற்காக பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. எனினும், செலவு செய்த விவரத்தை தாக்கல் செய்து அந்தத் தொகையை பாகிஸ்தான் பெற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பதில், தீவிரவாதிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளும் எம்பிக்களும் தொடர்ந்து தங்களது கவலையை வெளிப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணு வத்துக்கு நிதியுதவி வழங்கு வதற்காக அமெரிக்கா கடுமையான புதிய நிபந்தனைகளை விதித் துள்ளது. இது தொடர்பாக, பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் (2018) 3 திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் பிரதிநிதிகள் சபையில் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் விவகாரத்தில் திருப்தி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசின் செயல்பாடு இருந்தால்தான் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் பாகிஸ்தானின் நிதியுதவி கோரிக்கையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply