ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளனர். எல்லை தாண்டி வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று விடுகின்றனர்.

எனவே, ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கைபர் ஏஜென்சி பகுதியில் ராஜ்கல் பள்ளத்தாக்கு மலைப் பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

இதற்கு ‘கைபர் 4’ ஆபரேசன் என பெயரிடப்பட்டது. இத்தாக்குதலில் எத்தனை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply