வெற்றி பெறும் முன்னே ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் இன்று நடந்தது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ராம்நாத் கோவிந்தும் பங்கேற்றார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பிரதமராக மொரர்ஜி தேசாய் பதவி வகித்தபோது அவரது உதவியாளர் போல் ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். அவரது வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன். அவருக்கு எனது அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்.

ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகிய 2 ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளின் பிரசாரம் கண்ணியமாக இருந்தது. இது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினம் ஆகஸ்ட் 9-ந்தேதி வருகிறது. இதையொட்டி அன்று முதல் 1 வாரத்துக்கு நாடு தழுவிய நிகழ்ச்சிகளை எம்.பி.க்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply