சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் : ஐ.தே.க.

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் வெளியேறுவதாக தெரிவித்துள்ள விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியை அமைப்பது எமக்கு சாதாரண விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகுவார்களாயின் அது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply