அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு : பொதுமக்கள் பல சிரமத்தில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (25) காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர்.வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈட்டுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈட்டுப்பட்டிருந்தனர். இதனால் அங்குச் சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தாதிமார்களாலும் வைத்திய கடமை மேற்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர். மேலும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா, லிந்துலை, கொட்டகலை, டயகம, அக்கரப்பத்தனை போன்ற வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply