‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும்’: அமெரிக்க பேராசிரியர் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும்.அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்லோபான்ட்சிகோப் இதை தயாரித்து இருக்கிறார்.

மிசிசிப்பி பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் நாய்களிடம் அக்கருவியை பொருத்தி பரிசோதனை முறையில் ஆய்வு செய்தார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.

அதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் நாய்களுடன் பேச முடியும் என அவர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதே முறையில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுடன் பேச முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply