டாக்கா விமான நிலையத்தின் ஏர் இந்தியா அலுவலகத்தில் தீ விபத்து : பெரும் சேதம்

வங்கதேச நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ளது ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்துக்குள்ளான 3 அடுக்கு கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டது. மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து குறித்து ஏர் இந்தியா சேவை மைய அதிகாரி கூறுகையில், “எங்களது அலுவலகம் முழுவதும் தீயில் எரிந்து விட்டது. லாக்கர்கள், பேப்பர்கள் மற்றும் பணம் எல்லாம் தீயில் கருகி போய்விட்டது” என்றார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply