பாகிஸ்தான்: பலூச்சிஸ்தான் மாகணத்தில் பயங்கர குண்டுவெடிப்பு : 17 பேர் உடல்சிதறி பலி

பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 17 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருக்கும் பிஷின் பேருந்து நிறுத்தம் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்நிலையில், நேற்றிரவு, இந்த பேருந்து நிறுத்ததின் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

இந்த கோர குண்டு வெடிப்பில் சிக்கி 17 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வேறு வகையான தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண உள்துறை மந்திரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்கனவே இது போல பல தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply