வடக்கு – தெற்கு இன­வா­தி­க­ளி­டையே உத்­தி­யோ­கப்­பற்றற்ற ஒப்­பந்­தங்­கள்:அமைச்­சர் மனோ­க­ணே­சன்

வடக்கு – தெற்கு இன­வா­தி­க­ளி­டையே உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ஒப்­பந்­தங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இவர்­கள் அனை­வ­ரும் உற­வி­னர்­க­ளா­வர். இப்­ப­டி­யான உற­வி­னர்­கள் சிறி­த­ளவே இருக்­கின்­ற­னர். இவர்­களை ஓரம்­கட்டி இலங்­கை­யர்­கள் என்­ப­தன் கீழ் பய­ணிப்­போம் என அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:-

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க்குக்குச் சென்று ஐ.நா. பொதுச் சபை அமர்­வில் உரை­யாற்­ற­வுள்­ளார். அவர் உரை­யாற்­றும்­போது அங்­குள்ள இன­வா­தக் குழுக்­கள் அவ­ருக்­கெ­தி­ராகப் போராட்­டங்­களைச் செய்­ய­வுள்­ள­னர். பர­வா­யில்லை. இன்று இந்த நாட்­டில் சக­வாழ்வை முன்­னி­லைப்­ப­டுத்திப் பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றோம்.

அத­னைப் புரிந்­து­கொள்ள முடி­யா­த­ வர்­களே இன்­னும் இன­வா­தத்தை தலை­தூக்­கச் செய்கின்றனர். பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் மட்­டு­மல்ல, இன­வா­தம் எமது உள்­நாட்­டி­லும் இருக்­கின்­றது. வடக்­கி­லும், தெற்­கி­லும் இருக்­கின்­ற­னர்.

வடக்­கி­லுள்ள இன­வா­தி­கள் வாய்­தி­றக்­கும்­போது தெற்­கி­லுள்ள இன­வா­தி­க­ளுக்கு அவல் கிடைக்­கின்­றது. அதே­போல தெற்­கி­லுள்ள இன­வா­தி­கள் வாய்­தி­றந்­தால் வடக்­கி­லுள்ள இன­வா­தி­க­ளுக்கு அவல் கிடைக்­கி­றது. வடக்கு–தெற்கு இன­வா­தி­க­ளி­டையே உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ஒப்­பந்­தங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இவர்­கள் அனை­வ­ரும் உற­வி­னர்­க­ளா­வர். அத­னால் இப்­ப­டி­யான உற­வி­னர்­கள் சிறி­த­ளவே இருக்­கின்­ற­னர். இவர்­களை ஓரங்­கட்டி இலங்­கை­யர்­கள் என்­ப­தன் கீழ்ப் பய­ணிப்­போம்.

இவற்றைக் கணக்­கில் எடுக்­க­வேண்­டாம். தேர்­தல் காலத்­தில் பார்த்­துக் கொள்­ளுங்­கள். மற்­றைய நேரங்­க­ளில் இலங்­கை­யர்­க­ளாக நினைத்­துக் கொள்­ளுங்­கள். இத­னைப் புரிந்­து­கொண்­டால் ஜெனிவா, ஐ.நா. பொதுச் சபை செல்ல வேண்­டிய தேவை ஏற்­ப­டாது. அதே­போல ஹுசைன், டிரம்ப், நரேந்­திர மோடி ஆகி­யோ­ரு­டன் பேசு­வ­தற்­கும் அவ­சி­யம் ஏற்­ப­டாது என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply