பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம்: ஐ.நா.சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசினார். கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியா 600க்கு மேற்பட்ட தடவை எல்லை தாண்டி தாக்குதல்களை நடத்தியுள்ளது என குற்றம் சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது.

எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களில் அவர்கள் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்களுக்கு வெற்றி கிடைக்காது.

பாகிஸ்தானின் தெருக்களில் சர்வசாதாரணமாக சுற்றி திரியும் தீவிரவாதிகளை வைத்துக் கொண்டு, மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. எனவே பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply