நேபாள பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதென்று நேபாளப் பிரதமர் சேர் பகதுர் தெவ்பா (Sher Bahadur Deuba) தெரிவித்தார்.தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக நேபாளப் பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நேபாளப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே நேபாளப் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

தெற்காசிய செயற்பாடுகள் தொடர்பில் இணைந்து செயற்படுவதற்காக பொது அமைப்பான சார்க் அமைப்பின் நடவடிக்கைகளை தொடர்சியாக முரண்பாடுகளின்றி முன்னெடுக்க வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

தான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நேபாளத்திற்கு செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி நேபாளப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதுதவிர அமெரிக்காவின் அரசியல் அலுவல்களுக்கு பொறுப்பான செயலாளர் தோமஸ் ஏ ஷெனன் மற்றும் ( Thomas A. Shannon Jr.) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்குடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போருக்கு பிந்திய காலத்தில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதென அவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply