இலங்கையில் மணப்பெண் உடுத்திய 3 கி.மீ. நீள சேலை: பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியதால் சர்ச்சை

இலங்கையில் உள்ள கண்டியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் மணப்பெண் அணியும் சேலை கின்னஸ் சாதனை படைக்க 3.2 கி.மீட்டர் நீளத்துக்கு தயாரிக்கப்பட்டது. திருமணத்தன்று மணப்பெண் அந்த சேலையை உடுத்தியிருந்தார். அது போக சேலையின் மீதி பகுதியை தூக்கி பிடித்தபடி செல்ல அரசு பள்ளியில் படிக்கும் 250 பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.

அவர்கள் கண்டி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது மணப்பெண் அணிந்த 3 கி.மீட்டர் நீள சேலை தரையில் படாதபடி தூக்கி பிடித்தபடி நடந்து சென்றனர். மணமக்களுக்கு மலர் தூவ மேலும் 100 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண் அணிந்த மிக நீளமான சேலையை தூக்கி பிடித்திருக்கும் பள்ளி குழந்தைகளை படத்தில் காணலாம்

இந்த திருமண விழாவில் மத்திய மாகாண முதல்- மந்திரி சரத் ஏகநாயகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மணப்பெண்ணின் சேலையை தூக்கி பிடித்தபடி செல்ல பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியது குற்றம் என குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும் அது அவர்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளது.

எனவே இச்சம்பவம் குறித்து மணமகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply