ஆப்பிரிக்க நாட்டில் ரத்தக்காட்டேரி பயத்தில் 9 பேர் அடித்துக் கொலை

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் பிளாண்ட்ரீ என்ற மாகாணம் உள்ளது. அங்கு மாந்திரீக நாட்டம் உடைய மக்கள் அதிகம் உள்ளனர்.அங்கு சில மாதங்களாக ரத்தக்காட்டேரிகளின் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியது. அதையடுத்து அப்பகுதி மக்கள் கடும் பயத்தில் இருந்தனர்.இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. எனவே அவரை ரத்தக்காட்டேரி என கருதி அவரை அடித்து கொன்று தீயிட்டு கொளுத்தினர்.

அதேபோன்று ரத்தக்காட்டேரி என்ற சந்தேகத்தில் 9 பேரை அடித்துக் கொன்றனர். அவர்களை அங்குள்ள பகுதிகளில் குழிதோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 9 பேரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply