மங்களவை தொடர்ந்தும் வைத்திருப்பதா? : தேசிய சங்க சபை ஜனாதிபதியிடம் கேள்வி

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் பியர் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு கொள்கையைப் புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையாகும் என தேசிய சங்க சபை இன்று (13) அறிவித்துள்ளது. பொருளாதார கொள்கை மற்றும் வரவு செலவுத் திட்டம் என்பன தயாரிக்கும் போது ஜனாதிபதியின் கொள்கை, தேசிய கொள்கைகள் என்பனவற்றை கருத்தில் கொள்வதில்லையா? எனவும் நிதி அமைச்சிடம் சங்க சபை கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கையை எட்டி உதைக்கும் மங்கள சமரவீர போன்றவர்களை நிதி அமைச்சுப் பதவியில் வைத்துக் கொள்வது பொருத்தமாகுமா? எனவும் சங்க சபை வினா எழுப்பியுள்ளது.

ராஜகிரிய ஸ்ரீ ஜயவர்தனபுற ஜயசேகராராமயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேசிய சங்க சபையின் பிக்குகள் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply