ஜனா­தி­ப­தி­யாக பதவியேற்கவுள்ளார், உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனன்­கவ்யா

சிம்­பா­வேயின் முன்னாள் ஜனா­தி­ப­தி ரொபர்ட் முகாபே எவரும் எதிர்­பா­ராத வகையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து, புதிய ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனன்­கவ்யா, நாளை வெள்­ளிக்­கி­ழமை 24 பத­வி­யேற்­க­வுள்ளார். ரொபேர்ட் முகா­பேயால் பணி நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த எமர்ஸன், இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளி­யேறி தென் ஆபி­ரிக்­காவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்தார்.

எமர்­ஸனின் பணி நீக்­க­மா­னது, சிம்­பா­வே அர­சாங்­கத்தில் இரா­ணுவம் தலை­யீடு செய்­யவும், முகா­பேயின் 37 வருட கால ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­ப­டவும், வழி­வகை செய்­தது.

93 வயதான முகாபே, தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தமை தொடர்­பான செய்தி வெளி­யா­னதும் அந்­நாட்டு மக்கள் அதனை ஒரு விழா­வாகக் கொண்­டா­டினர்.

இந்­நி­லையில் தனது அர­சியல் தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ‘முதலை’ என அழைக்­கப்­படும், முன்னாள் உப ஜனா­தி­பதி எமர்ஸன், புதிய தேர்தல் இடம்­பெறும் வரை முகா­பேயின் பத­வியை வகிக்­க­வுள்­ள­தாக ஆளும் ஸானு-பி.எப். கட்­சியின் பேச்­சாளர் தெரி­வித்துள்ளார்.

அந்­நாட்டின் புதிய தேர்­தல்கள் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லையில் எமர்ஸன் நாளை வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள வைப­வத்தில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் சிம்­பாப்வே ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் தெரி­வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply