இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தில் பிரேரணையொன்றை நிறைவேற்ற கட்சித் தலைவர்களிடையே உத்தியோகப் பற்றற்ற முறையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு ஒரு பிரேரணை கொண்டு வரப்படுமாக இருந்தால், அரசாங்க தரப்பிலுள்ள கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியவந்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கூட்டு எதிர்க் கட்சி ஆகிய கட்சிகள் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகி மூன்று மாத காலத்துக்குள்தான் அது தொடர்பில் உள்ள மறுப்புக்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இருப்பினும், உள்ளுராட்சி சபை எல்லைநிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளமையானது மூன்று மாதங்கள் சென்றதன் பின்னரேயே என்ற சட்ட ஆலோசனையின் பேரிலேயே பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று (24) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply