வருமானத்தை பெருக்க வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா திட்டம்

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் ஆக முகமது பின் சல்மான் பதவி ஏற்றபின் நாட்டின் முன்னேற்றத்துக்கு பல அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை நீக்கியுள்ளார்.அந்த வகையில் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ‘சுற்றுலா விசா’ வழங்கப்பட உள்ளது.

நாட்டின் வருமானத்தை பெருக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது அடுத்த ஆண்டு (2018) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.இத் தகவலை சவுதி சுற்றுலா மற்றும் இயற்கை பாரம்பரிய துறை தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அறிவித்துள்ளார்.

தற்போது சவுதி அரேபியாவுக்குள் வெளிநாட்டினர் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு தங்கி பணிபுரிபவர்கள், அவர்களுக்கு மிகவும் நெருக்க மானவர்கள், மற்றும் புனித தலங்களுக்கு செல்லும் முஸ்லிம் யாத்ரிகர்களுக்கு மட்டும் ‘விசா’ வழங்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply